india

img

ராமர் கோயில் பெயரில் தொடரும் வசூல் மோசடி... மீரட், லக்னோ வரிசையில் போபாலிலும் கைவரிசை

போபால்:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் துவங்கிய போது, கூடவே நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்களும் துவங்கி விட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில், நரேந்திர ராணாஎன்பவர் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) பெயரில் அலுவலகம் திறந்து, ராமர் கோயில் பெயரில்பல லட்சங்களை சுருட்டினார். இதில் ஒருவர் கைது செய்யப் பட்டார்.அடுத்ததாக, ராமர் கோவில்அறக் கட்டளை வங்கிக்கணக் கில் இருந்தே, ரூ. 6 லட்சத்தை,ஆசாமிகள் சிலர், கடந்த செப்டம்பர் மாதம் போலி காசோலைகொடுத்து, கையாடல் செய்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராமர் கோயில் பெயரில் நிதி மோசடி நடக்கிறது; இதில்வசூலாகும் கோடிக்கணக்கான பணத்தை வைத்து, ஆர்எஸ்எஸ்,விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே இரவில் குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர் என்று ம.பி.மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கண் டிலால் புரியா பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.இந்நிலையில்தான், ம.பி. மாநிலம் போபால் அசோகா கார்டனில் வகிக்கும் மணீஷ் ராஜ்புத் (30) என்பவர், அயோத்தி ராமர் கோயில் பெயரில் ‘ராம் ஜன்மபூமி சங்கல்ப் சொசைட்டி’ என்ற தனி அமைப்பைபே உருவாக்கி பல லட்சங்களை நன்கொடையாக வசூலித்து மோசடிசெய்துள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளார்.. இவர் மீது ஐபிசி420, 120பி, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

;